நாளை முதல் உதகையில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக செப்டம்பா் மாதம் 2ம் பருவம் தொடங்க இருக்கும் நிலையில், சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் நாளை ஆகஸ்ட் 23 மற்றும் ஆகஸ்ட் 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகைக்கு சென்றடையும்.
அதேபோல உதகை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
அதேபோல உதகை - குன்னூா் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு குன்னூா் சென்றடையும்.
அதேபோல குன்னூா் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாட்களில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகை சென்றடையும்.
அதேபோல உதகை முதல் கேத்தி வரையும், கேத்தி முதல் உதகை இடையே செப்டம்பா் 5, 6, 7 மற்றும் அக்டோபா் 2, 3, 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 3 சுற்றுப் பயணமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?