வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று சென்னைக்கு தனியே ஒரு அடைமொழி உண்டு. தமிழகத்தின் கடைக்கொடி கிராமத்தில் இருந்தும் இன்றும் கூட ஒரு பைசா இல்லாமல் சென்னைக்கு ரயிலேறி வந்து தனக்கான பிழைப்பை சென்னையில் உருவாக்கி, அதன் பின்னர் தங்கள் தலைமுறையையே வசதியாக வாழ வைத்தவர்கள் பலர் உதாரணமாக இருக்கிறார்கள்.
சில வருடங்கள் கழித்து சென்னையில் தனக்கான வழியை தேடியிருப்பர். இந்த சொலவடை தொன்று தொட்டே இருந்து வருகிறது. அதற்கேற்ப இங்கு வேலை வாய்ப்புக்கள் ஏராளம். தொழில் தெரிந்தவர்கள் தான் என்று இல்லை வாயால் பிழைத்தவர்களே ஏராளம். இத்தனை பெருமைமிகு சென்னைக்கு சென்னை டே ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
இன்று ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் இருவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஐயப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து தற்போது இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினர்.இன்று சென்னையின் வயது 386.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் பெசன்ட் நகரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெசண்ட் நகர் பகுதிகளில் 2 நாட்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீரை அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?