திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிதன்யாவின் கணவர், மாமனார்- மாமியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. முன்னதாக மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.