தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதிலும் ஸ்லோமோஷன் வாக்கிங்கில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி இன்னும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு கடும் போட்டியாளராக விளங்குகிறார். எத்தனை புது முகங்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒரு முகத்தை யாராலும் மறக்கடிக்க முடியவில்லை.
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் அவரின் ஸ்டைல்களை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பான் இந்தியா அளவில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் 400 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது. எவ்வளவு வயதானாலும் ரஜினிக்கான மாஸ் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய போக்கை மாற்றி அமைத்த படம் ’கபாலி’. அதுவரை இளம் கெட்டப் போட்டுக் கொண்டு இளம் ஹீரோயின்களுடன் பாட்டு பாடிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஒரு திருப்புனையை ஏற்படுத்தித் கொடுத்தவர் பா.ரஞ்சித். தன்னுடைய படத்தில் ரஜினியை முழுவதுமாக மாற்றி அவர் வயதுக்கு ஏத்த கெட்ட கொடுத்து கமர்சியல் ஹீரோவாக சக்ஸஸ் கொடுத்தார். இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த தாணு கபாலி படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில்,
” நான் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தேன். முதலில் ஏற்றுக் கொள்ள கொடுத்தார். பின்னர் நாங்கள் அவரை எப்படியோ கன்வின்ஸ் செய்து ஒப்புக்கொள்ள வைத்து விட்டோம். இன்றும் சொல்வார் ஏன் சார் அந்த பட்டம் கொடுத்தீங்கன்னு. அவ்வளவு தன்னடக்கம் கொண்டவர். கபாலி படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவருக்கு தங்குவதற்காக பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து இருந்தேன். அந்த ஓட்டலில் ஒரு ஃப்ளோர் முழுவதும் ரஜினி சாருக்காக ஏற்பாடு செய்திருந்தேன் அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவு செய்தேன்”.
”ரஜினி சார் இதை பார்த்துட்டு என்னை கூப்பிட்டு ஏன் சார் இப்படி பண்றீங்க. எனக்கு ஒரு லட்சம் அல்லது 50 ஆயிரத்துக்கு கீழ் இருக்கும் ஏதாவது ஒரு அறையை எனக்கு ஏற்பாடு செய்து தாருங்கள். என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகி விட்டேன். என்னடா இவரு இப்படி சொல்றாரேனு ஹோட்டல் ரெசப்ஷன் சென்று அவர்களிடம் பேசி விலை குறைவான ரூமை தயார் செய்து கொடுத்தேன். இதனால்தான் ரஜினி என்றைக்கும் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக இருக்கிறார். எங்களுக்கு பெரிதும் நஷ்டம் வைக்காத ஹீரோ என்றால் அது ரஜினி சார் தான்”. என்று அந்த பேட்டியில் ரஜினியின் புகழ் பாடியுள்ளார்.