தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகள் அரசு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை நாளை (ஆகஸ்ட் 22) முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ரூ.50 கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் தமிழ் இலக்கியம் மீது உள்ள ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் வகையில் இந்த தேர்வுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.