Breaking: திடீர் திருப்பம்..! மகனுக்கு பதில் மகள்..? பாமக கட்சியின் தலைமை பொறுப்பில் ராமதாஸ் மகள் காந்திமதி… அதிரடி அறிவிப்பு..!!
SeithiSolai Tamil August 22, 2025 08:48 PM

பாமக தலைமை குடும்பத்தில் தந்தை–மகன் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், தற்போது கட்சியின் செயல் திட்டங்களிலும் தெளிவாகக் காணப்படுகின்றன. ஒருபுறம், ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகள்; மறுபுறம், அன்புமணி பின்பற்றும் நடைமுறை என்று பாமக இன்று இரண்டு பாதைகளில் பயணிக்கிறது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், பாமகவின் தலைமை நிர்வாக குழுவில் ராமதாஸ் தனது மூத்த மகளான ஸ்ரீகாந்திக்கு முக்கியமான இடத்தை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாமகவின் 21 பேர் கொண்ட தலைமை நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், கட்சியின் எதிர்காலத்தில் ராமதாஸ் மகளும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகின்றது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.