மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.6.20 கோடியை கர்நாடக அரசு ஊதியமாக வழங்கியுள்ளது.
மைசூர் சந்தன சோப்பு 1916 முதல் தயாரிக்கப்பட்டுவருகிறது. மைசூர் சந்தன சோப்பை அரசுக்கு சொந்தமான நிறுவனமான கர்நாடக சோப்ஸ் மற்றும் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 110 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சோப்பு பிராண்டின் முக்கிய விளம்பரதாரராக யார் இருக்க வேண்டும் என்ற கேள்வி கர்நாடகாவில் எழுந்தது. அப்போது மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக மும்பையில் பிறந்த பாலிவுட் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளது.
மைசூர் சாண்டல் சோப் தினசரி 12 லட்சம் சோப்புகளை தயாரிக்கிறது. மேலும் அதன் நிலையில், விற்பனையை அதிகரிக்க பிரபலங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறது. எம்.எஸ். தோனி, தீபிகா படுகோன், ராஷ்மிகா, தமன்னா உள்ளிட்டோர் விளம்பர முகங்களாக இணைந்துள்ளனர். இதற்காக இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.56 கோடி விளம்பரச் செலவிட்டுள்ளது கர்நாடக அரசு.