ககன்யான் பயணத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு மைல்கல்லைக் எட்டியுள்ளது.இதில் "ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (IADT-01)" என்ற விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்க நடத்தப்பட்டது.
இது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக 'இஸ்ரோ' அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் இந்த பாராசூட் அமைப்பு, ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது என்றும் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும்போது விண்வெளிவீரர் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதைப் பாதுகாப்பாக தரையிறக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சோதனை இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் நடத்தப்பட்டது.இதனால் இஸ்ரோ இந்த பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இந்த சோதனையில் இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, ட்ரடோ மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன.
இதனால், ககன்யான் பணி மூலம் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறிக்கொண்டிருக்கிறது,