உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்...!-பிரேமலதா விஜயகாந்த்
Seithipunal Tamil August 25, 2025 03:48 AM

மதுரை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 -வது மாநில மாநாடு நடைபெற்றது. குறிப்பாக இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அந்த மாநாட்டில் விஜய் அவர்கள் உரையாற்றிய போது, விஜயகாந்தை அண்ணன் என்று தெரிவித்து அவரை புகழ்ந்து பேசினார்.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை விஜய் புகழ்ந்து உரையாற்றியதை விமர்சித்த சீமான் அவர்கள், "விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது விஜய், அவர் கட்சிக்கு ஆதரவாக பேசவும், அவரை சந்திக்கவும் இல்லை;

என் கருத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. என் முகத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று விஜய் தெரிவிக்கிறார் " என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் குறித்து விஜய் தெறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் விமர்சித்தது குறித்த கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலளித்தார்.

அவர் தெரித்ததாவது, "தலைவர் விஜய்காந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரை வந்து சந்திக்கவில்லை. ஆனால், இறந்த பிறகு வந்து பார்த்தார்.

இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன், உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்" என்று தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.