சிங்க பெண்ணே…! “13 வயதில்18,510 அடி உயரமலை சிகரத்தில் ஏறிய சிறுமி”… வேற லெவல் சாதனை… மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள்…!!!
SeithiSolai Tamil August 25, 2025 03:48 AM

ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான மவுண்ட் எல்பிரஸ், கடல் மட்டத்தில் இருந்து 18,510 அடி (5,641 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. முன்னதாக இரு எரிமலைகள் இருந்த இந்த மலை தற்போது பனிக்கட்டியால் சூழப்பட்டு, எப்போதும் கடும் குளிரில் இருக்கும். இம்மலையில் ஏறுவது பலருக்கு கனவாகவே இருந்து வருகிறது.

இந்த கனவுகளை நனவாக்கி, மராட்டிய மாநிலம் சட்டாராவைச் சேர்ந்த 13 வயதான தைரிய குல்கர்னி என்ற சிறுமி, தனது இளம் வயதிலேயே மவுண்ட் எல்பிரஸ் சிகரத்தை கடந்த பெருமையை பெற்றுள்ளார். கடும் குளிரும் சிரமமான ஏறும் பாதைகளையும் தைரியத்துடன் கடந்து, பனி உறைந்த உச்சியில் இந்தியக் கொடியை நிமிர்த்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சாதனையை முடித்துவிட்டு நேற்று இந்தியாவுக்கு திரும்பிய தைரிய குல்கர்னிக்கு அவரது ஊரில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள், ஆரத்தி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக வரவேற்றனர். அந்த நேரத்தில் அவருடைய பெற்றோரும் மகிழ்ச்சியுடன் உடனிருந்தனர். ஊர்மக்கள் அனைவரும் அவரை பாராட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தைரிய, “நான் 10 நாட்களுக்கு முன்பு எல்பிரஸ் சிகரத்தை ஏறினேன். முதலில் 15-ந்தேதி உச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால், காலநிலை சிக்கலால் 14-ந்தேதியே சிகரத்தைத் தாண்டினேன். இந்த சாதனைக்கு ஊக்கம் அளித்தவர்கள் என் பெற்றோர்கள் தான். அவர்களுக்கு நன்றி” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.