ஆக.26ல் பிரதமர் மோடி தமிழக வருகை திடீர் ரத்து!
Dinamaalai August 22, 2025 08:48 PM

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ல் தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து ஆகஸ்ட் 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாகவும், தமிழகம் வரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் மோடி உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 26ல் தமிழகம் வருவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் மாற்றப் பணி காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், திருவண்ணாமலை, சிதம்பரம் கோயிலிலுக்கு வருவதாக இருந்த மோடி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் முதல் வாரத்தில் மோடி தமிழகம் வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.