அடுத்தடுத்து அதிர்ச்சி.. தவெக மாநாட்டில் 2 பேர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!
Dinamaalai August 22, 2025 08:48 PM


தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  தமிழகம் முழுவதும்  இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  ஆனால் விழாவில்  சென்னையை சேர்ந்த பிரபாகரன் வேனில் நண்பர்களுடன்  மதுரை மாநாட்டிற்குச் சென்றுள்ளார். சக்கிமங்கலம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற அவர், பின்னர் திரும்பி வரவே இல்லை. 

அவரை தேடிய   நண்பர்கள் அவரை மயங்கி விழுந்த நிலையில் கண்டுபிடித்து, உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பிரபாகரன் உயிரிழந்தார்.இதற்கு மேலாக, மாநாட்டில் கலந்து கொண்ட நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறலால் மயங்கி சரிந்தார்.

 அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தார். விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற இவர்களின் மரணம், தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்,  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.