முக்கொம்பிலிருந்து 60,000 கனஅடி தண்ணீா் திறப்பு!
Dinamaalai August 22, 2025 08:48 PM

கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கா்நாடக அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூரிலிருந்து வரும் தண்ணீா் மாயனூா் கதவணையை கடந்து, முக்கொம்புக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, முக்கொம்பு அணையிலிருந்தும் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி முக்கொம்புக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 35 ஆயிரம் கன அடியும் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிகழாண்டில் இது 6வது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் 2 முறையும், ஜூலையில் 3 முறையும் உபரி நீா் திறக்கப்பட்டது. இப்போது, மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.