2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் முக்கிய பந்துவீச்சாளர் கவுஹர் சுல்தானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.
“இந்திய ஜெர்சியை அணிந்து விளையாடிய ஒவ்வொரு நொடியும் பெருமையாக இருந்தது. இப்போது என் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்கிறேன்” என்ற வார்த்தைகளில் தனது ஓய்வு அறிவிப்பை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.
கவுஹர் சுல்தானா 2008-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார். அதன் பின் 50 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் 29 விக்கெட்டுகள் எடுத்து கவனத்தை பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 4/4 என்கிற சிறந்த பந்துவீச்சு சாதனையைப் படைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அணியில் இடம் பெறாத நிலையில், தற்போது தனது கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
“>
அவர் கடைசியாக 2014-ல் இலங்கையை எதிர்த்து ஒருநாள் போட்டி மற்றும் பாகிஸ்தானை எதிர்த்து டி20 போட்டியில் விளையாடியிருந்தார். இந்த ஓய்வு அறிவிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான பக்கத்தை மூடுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.