இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிரடி கைது.. என்ன காரணம்?
WEBDUNIA TAMIL August 23, 2025 07:48 AM

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தனது பதவி காலத்தில் அரசு நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று கொழும்புவில் உள்ள குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2022 முதல் 2024 வரை அதிபராக இருந்த விக்ரமசிங்க, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பி.எச்டி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, 2023 செப்டம்பரில் பிரிட்டனுக்கு சென்றார். இந்த கல்வி பயணத்திற்கு அரசு நிதியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பயணம் கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், லண்டன் பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டதாகவும், அதற்கு சுமார் ரூ. 1.69 கோடி பொது நிதியை பயன்படுத்தியதாகவும் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தனிப்பட்ட பயணத்தின் போது, அவருடன் பத்து பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.

விக்ரமசிங்கவின் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாலும், இன்றைய கைது, இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.