Madharasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம்தான் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் இது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் ருக்மணி வசந்த், பிஜி மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. ஆனால் இந்த படம் பற்றி எந்த அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. அதற்கு காரணம் இந்தியன் 2, தக் லைப், கங்குவா போன்ற திரைப்படங்களுக்கு அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வி அடைந்தன. அது தனது மதராஸி படத்திலும் நடந்துவிடக்கூடாது என முருகதாஸ் நினைக்கிறார். எனவேதான் எந்த புரோமோஷனும் செய்யவில்லை. சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த முருகதாஸ் ‘மதராஸி படம் ஒரு காதல் கலந்த ஆக்சன் படம்.. இன்னொரு கஜினி’ என்றும் பேசினார்.
#image_title
இந்நிலையில் வருகிற 24-ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஹிட்டடித்து 300 கோடி வசூல் செய்த நிலையில் அவரின் அடுத்த படமாக மதராஸி படம் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என சிலர் கிண்டலடிக்கும் நிலையில் ஆடியோ லான்ச்சில் விஜயை போல சிவகார்த்திகேயனும் குட்டிக்கதை சொல்வாரா என சிலர் கிண்டலாக கேட்கிறார்கள்.
ஒருபக்கம் சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.