அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பரப்பவுரையை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 22) செய்யூர் தொகுதியை அடுத்த மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியத்தவந்து:
திமுக ஆட்சியமைத்து 51 மாதம் முடிந்து, 05-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியின் சாதனை மக்களுக்கு சோதனை தான். விலைவாசி விண்ணை முட்டிவிட்டது, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், மளிகைக் கடையில் விலைவாசி புள்ளிவிவரம் வாங்கி வந்து பேசுகிறேன் என்றும், மளிகைப் பொருட்களின் விலை அத்தனையும் உயர்ந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும் போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் மக்களுக்குக் கொடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நானும் 1989-இல், எம்.எல்.ஏ. ஸ்டாலினும் 1989-இல் எம்.எல்.ஏ. அதன்படி தான் வந்தது வேறு வழி என்றும் , அவர் தலைவர்கள் பேச்சைக் கேட்டு உழைத்து வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலின் அப்படி உழைத்து வந்தாரா..? அவர் குடும்பம் மூலம் இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் அப்படியல்ல, படிப்படியாக உழைத்து வந்ததாகவும், மக்களோடு மக்களாக வாழ்ந்தவன் என்று தெரிவித்துள்ளார். இன்றுவரை அவர் விவசாயம் செய்து வருவதாகவும், விவசாயியை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பேசியுள்ளார்.
மேலும், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் 2022-ஆம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1538 டன் அரிசி மூன்றாண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் வீணாகிவிட்டது, அதை கோழி கூட சாப்பிடாது. 1538 டன் என்றால் 15,380 மூட்டை அரிசி வீணடிக்கப்பட்டுவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அதிமுக ஜனநாயகம் உள்ள இயக்கம், உங்கள் இயக்கம். யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்த போது இபிஎஸ் பேசியுள்ளார்.