பாகிஸ்தான் நாட்டில் பைபர் பக்துவா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தெற்கு வாசிர்தான் மாவட்டம் ஆசன் வார்சக் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?