உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் நகரத்தில் உள்ள பள்ளியில் ககன்சிங் (35) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் 9-ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மாணவனின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது..
இதனால் கோபமடைந்த மாணவன் டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்து பாடம் நடத்தி கொண்டிருந்த ககன்சிங்கின் முதுகில் சுட்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆசிரியர் அடித்ததால் பழிவாங்குவதற்காக துப்பாக்கியால் சுட்டதாக மாணவன் வாக்குமூலம் அளித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.