கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பினால் பாதிக்கப்பட்ட அவர், நீண்டநாட்களாக சுகயீனம் அனுபவித்த நிலையில் காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “சுதாகர் ரெட்டி தனது முழு வாழ்க்கையையும் மக்களின் உரிமைக்கான போராட்டங்களுக்கு அர்ப்பணித்தார். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு என்றும் உத்வேகமாக இருக்கும்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“>