”தக் லைப்” படத்தில் கடைசியாக நடித்த கமல்ஹாசன், அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பரிவை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், ஒரு நேர்காணலில் தனது தந்தையைப் பற்றி பேசியுள்ளார். ”தக் லைப்” தோல்விக்குப் பிறகு தந்தையின் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டபோது, “படத்தின் தோல்வி அப்பாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர் சம்பாதிக்கும் பணத்தில் வீடு, கார் வாங்கும் எண்ணமே இல்லை; எல்லாமே சினிமாவுக்காக செலவாகிறது” என்று கூறினார்.
கூலி படத்தில் கடைசியாக நடித்திருந்த ஸ்ருதிஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன் ‘டிரெய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இதோடு, துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். தனது அடுத்தடுத்த படங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ருதிஹாசன் அளித்த இந்த பேட்டி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.