மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டில், கட்சி தலைவர் விஜய் உரையாற்றியபோது, தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தை “அண்ணன்” என்று குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்த நிலையில், விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை திரையரங்குகளில், விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்த சண்முக பாண்டியன், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று தவெக மாநாட்டில் விஜய் பேசிய உரையைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “விஜய்யை அப்பா (விஜயகாந்த்) சிறுவயதிலிருந்தே பார்த்து வந்தார். அதனால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டு. அதற்காகவே விஜய் அப்பாவை அண்ணன் என்று கூப்பிடுகிறார். இதில் பெரிதாக எதையும் பார்க்க வேண்டியதில்லை. அப்பா எப்போதும் மக்களின் சொத்துதான். அவரை அண்ணன் என்று சொன்னது ஒரு பாசத்தோடு கூறப்பட்ட வார்த்தை மட்டுமே” என்று சண்முக பாண்டியன் தெரிவித்தார்.