சென்னையில் பரபரப்பு... ரிசர்வ் வங்கி எதிரே சென்னை துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Dinamaalai August 23, 2025 02:48 PM

சென்னையில் துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி பகுதிகள் துவங்கி, துறைமுகம் மற்றும் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னையில் தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி எதிரே உள்ள சென்னை துறைமுகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இது குறித்து துறைமுக அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

துறைமுகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.