நாகை, ஆகஸ்ட் 23 : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாத பேரலாய திருவிழாயொட்டி, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். கோயில் திருவிழா, விஷேச தினங்களில் இதுபோன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகிறது. எனவே, குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் வேறு நாட்கள் வேலை நாளாக இருக்கும்.
நாகையில் 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறைஅந்த வகையில், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது? வேளாங்கண்ணி பேரலாய திருவிழாயையொட்டி, அம்மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டங்களுக்கு 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெளியூர்களுக்கு மாணவர்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம்.
Also Read :+1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
வேளாங்கண்ணி ஆலய திருவிழாஆண்டுதோறும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2025ஆம் ஆண்டு வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாலையில் தேர் பவனி நடைபெறும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரளுவார்கள்.
Also Read : அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்.. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
சிறப்பு பேருந்துகள், ரயில்கள்இந்த திருவிழாயொட்டி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. அதாவது, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியம மாத ஆலயத் திருவிழாவையொட்டி, 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், இந்த திருவிழாவையொட்டி, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.