பகலில் சுறுசுறுப்பின்றி சோர்வாக தூங்கிவிடுகிறீர்களா? அதற்குக் காரணம் உங்களின் உணவு பழக்கம் தான் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலை எழுந்தவுடன் பலர் டீ அல்லது காபி குடித்து உற்சாகமாக நாளை தொடங்குகிறார்கள். ஆனால், சிலருக்கு எத்தனை டீ குடித்தாலும் சோர்வாகவே இருந்து, தூக்கத்தை அடக்க முடியாமல் போகிறது. உண்மையில், அதற்குக் காரணம் அவர்கள் சாப்பிடும் சில உணவுகள்தான்.
பகலில் தூக்கம் வரவழைக்கும் உணவுகள்:
அதிக உப்பு கலந்த உணவுகள் – ஊறுகாய், கருவாடு
நன்கு பழுத்த பழங்கள் – வாழைப்பழம், வெண்ணெய்ப்பழம்
பாலாடைக்கட்டிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஈஸ்ட் கலந்த உணவுகள்
ஓட்ஸ், பாதாம், பருப்பு வகைகள், அக்ரூட், டோஃபு, வான்கோழி இறைச்சி
பூசணி விதைகள், சியா விதைகள், தர்பூசணி
இந்த உணவுகளில் உள்ள டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலம், மெலடோனின் எனப்படும் தூக்க ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால், சாப்பிட்ட பிறகு உடல் சோர்வடைந்து தூக்கமாக உணரப்படுகிறது.
மருத்துவ ஆய்வுகள் கூறுவதாவது – பகலில் அதிகமாக தூங்குவது, சோர்வுடன் மட்டுமல்லாமல், ஆரம்பகால மரணம் ஏற்படும் ஆபத்தையும் அதிகரிக்கிறது. 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வயதினரை வைத்து நடந்த ஆய்வில், பிற்பகலில் அடிக்கடி தூங்கும் நபர்களுக்கு, அப்படி தூங்காதவர்களை விட முன்கூட்டியே இறக்கும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பகலில் தூங்குவது இரவில் போதுமான ஓய்வு இல்லாததற்கான எச்சரிக்கை ஆக இருக்கலாம். அதோடு, தூக்கக் குறைபாடு, டிமென்ஷியா, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.
எனவே, தொடர்ந்து பகலில் சோர்வாக இருக்கும் நிலை இருந்தால், அதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.