அட கொடுமையே... பணத்திற்காக சிறுமி கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!
Tamilspark Tamil August 24, 2025 01:48 AM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணத்திற்காக 12 வயது சிறுமி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 15 வயது சிறுவனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகள் இருந்தார். கிருஷ்ணா மற்றும் ரேணுகா இருவரும் பணி செய்வதால் பள்ளி விடுமுறை நாட்களில் அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கிருஷ்ணாவின் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனையறிந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளான். இதன் பிறகு மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த கிருஷ்ணா தனது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!

அப்போது பணத்திற்காக சிறுமியை குத்திக் கொலை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். திரைப்படங்களைப் பார்த்து எவ்வாறு வீட்டில் திருடுவது என்று குறிப்பெடுத்து வைத்திருக்கிறான் சிறுவன். கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாததை அறிந்த சிறுவன் அவர்களது வீட்டிற்கு சென்று 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி இருக்கிறான். இதனைப் பார்த்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி விடுவேன் என மிரட்டியதால், தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியை 20 முறை குத்தி கொலை செய்திருக்கிறான் அந்த 15 வயது சிறுவன். இதனைத் தொடர்ந்து சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம்..." 15 வயது மாணவன் கொலை.!! சிறுவன் கைது.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.