பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி தொடங்கி இருக்கும் யாத்திரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் வருகிற 26, 27ம் தேதிகளில் பிரியங்கா காந்தி கலந்துக் கொள்கிறார். 27ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், 29ம் தேதி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
அதே போல் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல்-மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) சுக்விந்தர் சுகு (இமாசலப்பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?