ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் விநியோக பகுதியை குண்டுவீசி தாக்கி அழித்துள்ளது உக்ரைன்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், போரை நிறுத்த பல நாடுகளும் முயன்று வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பல பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் ரஷ்யாவிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரித்தது. ஆனால் ரஷ்யா மலிவு விலையில் எண்ணெய் தருவதால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்குகின்றன.
ரஷ்யா போருக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கும், பொருளாதர ஸ்திரத்தன்மையுடன் உள்ளதற்கும் இந்த கச்சா எண்ணெய் வணிகமே காரணம் என அமெரிக்கா கூறி வந்தது. இந்நிலையில்தான் நேற்று ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது. பிரையான்ஸ்க் உனேச்சா எண்ணெய் நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலால் ரஷ்யாவிடம் இருந்து ஹங்கேரி, ஸ்லோவேகியா நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய்யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் நிலையங்களை தாக்கி ரஷ்யாவை முடக்குவது அமெரிக்காவின் ஐடியாவா என்ற கேள்வியையும் இது ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K