திருநெல்வேலி, ஆகஸ்ட் 23 : திருநெல்வேலியில் 7 வயது சிறுமியை தெருநாய் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு தற்போது மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களில் தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தெருநாய்கள் கடித்து வருகிறது. குறிப்பாக, நம் தமிழகத்தில் தெருநாய் கடியால் பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட சென்னையில் நாய்கடியால் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்தும், ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தியும் வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மருத்துவர்கள் தெருகளுக்கு சென்று, தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட, ஆக்ரோஷமான நாய்களையும், நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. இப்படியாக தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read : சென்னையில் பணியின் போது தாக்கிய மின்சாரம்.. தூய்மை பணியாளர் பலி
நெல்லையில் சிறுமியின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்இந்த நிலையில் தான் நெல்லையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, தெருநாய்கள் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் பிரித்திகாஸ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று மாலை பள்ளி முடிந்து வீடுக்கு திரும்பினார். அப்போது, வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கிருந்த நாய்கள் சிறுமியை துரத்தியது. இதில், நாய்களிடம் சிறுமி சிக்கிக் கொண்டார். இதையடுத்து, அவரது முகத்தை நிய்கள் கடித்து குதறியது.
Also Read : தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஆட்சியர்களுக்கு உத்தரவு.. தமிழக அரசு அறிவிப்பு!
இதனால், சிறுமியின் நெந்ற்றி, உதடு, மூக்கு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடிவந்து சிறுமியை மீட்டனர். உடனே நாயை விரட்டிவிட்டு சிறுமியை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.