ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனையடுத்து அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அவரது வீட்டில், வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.
கடன் மோசடி குறித்து அமலாக்கத்துறை செய்த வழக்குப்பதிவை தொடர்ந்து சிபிஐ-யும் சோதனை செய்து வருகிறது. மும்பையில் பல இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள் சிபிஐ இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 5 ம் தேதி அமலாக்க இயக்குநரகம் (ஈ.டி) அனில் அம்பானியை 17,000 கோடி ரூபாய்க்கு மேல் தொடர்புடைய வங்கி கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை செய்திருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?