Rainy Season Driving: மழைக்காலத்தில் வாகனம் ஓட்டும் நபரா நீங்கள்..? இந்த விஷயங்களில் கவனம்!
TV9 Tamil News August 23, 2025 10:48 PM

கோடைக்காலம் முடிந்து கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்குவிட்டது. இது மக்களுக்கு போதுமான குளிர்ச்சியை கொடுத்தாலும், மழைக்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உண்டாகும். மழைக்காலங்களில் (Rainy Season) தண்ணீர் தேங்குதல், வழுக்கும் சாலைகள் மற்றும் குறைவான பார்வைத்திறன் ஆகியவை வாகனம் ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை அதிகரிக்கின்றன. மழைக்காலங்களில் வாகனம் ஓட்டும்போது (Driving Safety) இந்த விஷயங்களை மனதில் கொள்வது முக்கியம். இல்லையென்றால், இது மிகப்பெரிய ஆபத்தில் முடியலாம். அதன்படி, மழைக்காலங்களில் பயணம் செய்வது பாதுகாப்பானதாக இல்லையென்றாலும், ஏனெனில் சில எளிய ஆனால் முக்கியமான விஷயங்களை மனதில் வைத்திருப்பது நல்லது.

காரின் வேகத்தில் கவனம்:

மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது காரின் வேகத்தை எப்போதும் குறைவாக வைத்திருங்கள். ஈரமான சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் போடுவது கட்டுப்பாட்டை இழக்க செய்யலாம். எனவே, வேகத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். குறைந்த வெளிச்சத்திலோ அல்லது கனமழையிலோ வாகனம் ஓட்டும்போதோ தெளிவாக நம்மால் எதை பார்க்க முடியாது என்பதால், உங்கள் ஹெட்லைட்களை எரிய வைக்கவும். ஹெட்லைட்களை ஆன் செய்வது உங்கள் காரை மற்றவர்கள் பார்க்க உதவி செய்யலாம். எனவே, எதிரே வரும் வாகனம் தெளிவாக தெரியும்.

ALSO READ: சமையலறையில் வேலை சுலபமாக இருக்க வேண்டுமா..? எளிதான ரகசிய குறிப்புகள்!

டயர்களை சரி பார்த்தல்:

மழைக்காலத்தின்போது உங்கள் வாகனத்தின் டயர்களைச் சரிபார்த்து கொள்வது முக்கியம்.  டயரில் நல்ல க்ரிப் இருந்தால், மழையில் வாகனம் வழுக்கும் வாய்ப்புகள் குறையும். மழைக்காலத்தில் தெளிவான பார்வையைப் பெற வைப்பர்கள் சரியாக வேலை செய்வது அவசியம். அவற்றை நல்ல நிலையில் வைத்திருங்கள்.

திடீர் பிரேக் போடுவதை தவிர்க்கவும்:

மழைக்காலத்தில் திடீர் பிரேக்கிங் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் திடீர் பிரேக்கிங் கார் சறுக்குவதற்கு வழிவகுக்கும். படிப்படியாக பிரேக் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மழைக்காலங்களில் பிரேக்கிங் தூரம் அதிகரிக்கும் என்பதால், எப்போதும் முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து போதுமான தூரத்தை வைத்திருங்கள்.

ALSO READ: மழைக்காலத்தில் அரிசியை அட்டாக் செய்யும் பூச்சிகள்.. பாதுகாக்க பக்கா ஃப்ளான் இதோ!

வாகனம் பழுதாக்கும் வாய்ப்பு அதிகம்:

மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவது பொதுவான ஒன்றாகும். மழைக்காலத்தில் ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்கு செல்வது வாகனம் மிகவும் முக்கியம். அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கூட, வாகனத்தின் தேவை வேண்டும். வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் கவனமாக இருங்கள். ஆழமான நீருக்குள் வாகனம் செல்லும்போது, கார்ப்ரேட் மற்றும் எஞ்சினுக்குள் தண்ணீர் சென்று இயந்திரம் நின்றுவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஆழம் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்குள் வாகனத்தை தவிர்க்கவும். அதன்படி, சஃப் வே உள்ளிட்ட பகுதிகளுக்குள் வெள்ளத்தின்போது வாகனத்தை இயக்க வேண்டாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.