ICC Women's World Cup 2025: மகளிர் உலகக் கோப்பை அட்டவணை மாற்றம்.. புறக்கணிக்கப்பட்ட பெங்களூரு.. ஐசிசி அதிரடி!
TV9 Tamil News August 24, 2025 01:48 AM

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Women’s World Cup 2025) வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி அதன் இறுதிப் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 2ம் தேதி முடிவடைகிறது. 2025 மகளிர் உலகக் கோப்பை அட்டவணை வெளியான பிறகு, ஐசிசி தற்போது மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் (Bangalore Chinnaswamy Stadium) நடைபெறவிருந்த போட்டிகள் மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 (IPL 2025) வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் எந்தவொரு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் இரண்டு போட்டிகளைப் பாதித்து, அட்டவணையையும் மாற்றியுள்ளது.

இந்திய அணியின் உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம்:

ஐ.சி.சி புதிய அட்டவணையை வெளியிட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் இந்த இரண்டு போட்டிகளுக்கான தேதிகள் மாறவில்லை, ஆனால் இடம் மாறிவிட்டது. லீக் கட்டத்தில் இந்தியா 7 போட்டிகளைக் கொண்டிருக்கும்.

  • 2025 செப்டம்பர் 30: இந்தியா v இலங்கை, கவுகாத்தி
  • 2025 அக்டோபர் 5: இந்தியா vs பாகிஸ்தான், கொழும்பு
  • 2025 அக்டோபர் 9: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம்
  • 2025 அக்டோபர் 12: இந்தியா vs ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம்
  • 2025 அக்டோபர் 19: இந்தியா vs இங்கிலாந்து, இந்தூர்
  • 2025 அக்டோபர் 23: இந்தியா vs நியூசிலாந்து, நவி மும்பை
  • 2025  அக்டோபர் 26: இந்தியா vs வங்கதேசம், நவி மும்பை

ALSO READ: மூன்று வடிவத்திலும் டாப் 10..! இடமில்லாமல் தவிக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. டி20 தரவரிசை அப்டேட்!

நாக் அவுட் போட்டிகளின் அட்டவணையில் மாற்றங்கள்:

UPDATE – #TeamIndia‘s revised schedule confirmed for ICC Women’s Cricket World Cup.#WomenInBlue #CWC25 pic.twitter.com/aQm8VjgzWV

— BCCI Women (@BCCIWomen)


ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி 2025 அக்டோபர் 29ம் தேதி கவுகாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி முன்னதாக சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் இப்போது நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும் நவி மும்பை அல்லது கொழும்பில் நடைபெறும்.

ALSO READ: ஷெபாலி வெர்மா நீக்கம்..! தலைமை தாங்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்.. 2025 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறினால், நாக் அவுட் போட்டிகளில் ஒன்று கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் அணி அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி இலங்கையின் தலைநகரான கொழும்பில் நடைபெறும். இந்த உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது, ஆனால் பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.