புனேயின் எரவாடா பகுதியில் உள்ள நேதாஜி பள்ளி அருகே, இரவு 10:30 மணியளவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் காதலனுக்கு மெசேஜ் அனுப்பியதை மையமாக வைத்து, இரு பெண்கள் குழுக்கள் மோதிக்கொண்டன. இந்த மோதலில், பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்து, முடியை இழுத்து, ஆபாசமாக பேசிய காட்சிகள் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்தக் களேபரத்தால் அப்பகுதியில் கூட்டம் கூடியது, உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இணையத்தில் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இளைஞர்களின் கூட்ட அழுத்தம், பெற்றோரின் அலட்சியம், சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை இதற்கு காரணமாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்பு, லோனாவாலாவில் மற்றொரு சம்பவம் இணையத்தில் பரவியது. பழைய புனே-மும்பை நெடுஞ்சாலையில், ஞாயிறு மதியம் ஒரு சிக்கன் கடையின் முன்பு மது போதையில் இருந்த பெண்கள், சாலையில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இந்த சண்டையால் போக்குவரத்து தடைபட்டு, வாகனங்கள் ஒலித்து, கூச்சலுடன் அப்பகுதி குழப்பமானது.
லோனாவாலா போக்குவரத்து காவல்துறை உடனடியாக விரைந்து சென்று, பெண் காவலர்கள் மூலம் அவர்களை தடுத்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த இரு சம்பவங்களும், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளன, மேலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.