Vishal35: தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக பெயர்பெற்ற விஷால் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
பொதுவாக சில ஹீரோக்கள் அவர்களின் ஹிட் ஜானரில் நடித்தாலே போதும். படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும். அந்த வகையில் விஷாலின் நடிப்பில் ஆக்ஷன் படமாக கடைசியாக வெளியானது மார்க் ஆண்டனி. வித்தியாசமாக டைம் டிராவல் எல்லாம் சேர்த்து இருக்க படம் மாஸ் ஹிட்.
அதிலும் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் அதீத வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது. அப்படத்தினை தொடர்ந்து விஷால் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவிக்காமலே இருந்தார். இந்நிலையில் சில தினங்கள் முன்னர் அவருடைய 35வது படம் குறித்த அறிவிப்பு வந்தது.
மீண்டும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு மகுடம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கின்றனர். இவர்கள் தயாரிப்பில் 99வது படமாக உருவாகும் இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் துஷாரா விஜயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய வகையில் விஷாலுக்கு இப்படத்தில் மூன்று கேரக்டர்கள் எனக் கூறப்பட்டது. அந்த வகையில் அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மார்க் ஆண்டனி படம் மூலம் வயதான ஒரு கெட்டப், இளைஞனாக ஒரு கெட்டப், ஐடி இளைஞராக ஒரு கெட்டப் என வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி டிராக்கில் இருக்கும் விஷால் இந்த படத்திலும் ஹிட் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.