குஷியோ குஷி..! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 12 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil August 28, 2025 01:48 AM

செப்டம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. இதில், செப்டம்பர் 5-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை காரணமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால், மாத இறுதியில் மட்டும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அமைகிறது. இதற்கு கூடுதலாக, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் சேர்ந்ததாக மொத்தம் 6 நாள் விடுமுறை கிடைக்கின்றது.

இதனால் செப்டம்பர் முழுவதும் மொத்தம் 12 நாட்கள் பள்ளிகள் இயங்காது எனும் தகவல் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.