மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில் வாக்குரிமை மட்டுமல்ல, ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"2023-இல் வாக்கு திருட்டு குறித்து நாங்கள் அறிந்ததும், புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, என்ன நடந்தாலும், தேர்தல் ஆணையர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டால், இப்படி ஒரு சட்டத்தின் அவசியம் ஏன் வருகிறது? என்று ராகுல் காந்தி பேசினார்.
"வாக்குத் திருட்டு என்பது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஏழைப் பொதுமக்கள் மீதான தாக்குதல். உங்கள் வாக்குகள் திருடப்பட்டால், அதன் தொடர்ச்சியாக, அடுத்தபடியாக ரேஷன் அட்டையையும், நிலத்தையும் இழக்க நேரிடும்" என்று அவர் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
Edited by Siva