12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - காரணம் என்ன?
Seithipunal Tamil August 28, 2025 01:48 AM

வருகின்ற ஏழாம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை மூடப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கிரகண காலங்களில் கோவிலின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், அடுத்த மாதம் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த கிரகண நிகழ்வையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். 

பின்னர் புண்யாஹாவசனம், தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்" என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.