விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு, மதுரை, தோவாளை, ஓசூர் போன்ற முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை நாளுக்கு நாள் உயர்வை கண்டுள்ளது.
குறிப்பாக மதுரை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ரூ.600க்கு விற்பனையான மல்லிகை பூ, இன்று கிலோவுக்கு ரூ.2,000 வரை விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பிச்சிப்பூ கிலோ ரூ.1,200, முல்லை ரூ.1,000, செண்டுமல்லி ரூ.130, வாடாமல்லி ரூ.250 என விலை ஏறி நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.