மனைவி Rocked… கணவன் Shocked… ஒரு சின்ன ட்ரிக் தான்… பாவம் அவரே கன்பியூசன் ஆயிட்டாரு… கடைசி நேரத்தில் தந்திரமாக விளையாடி ஜெயிச்ச பெண்… வீடியோ வைரல்…!!!!
SeithiSolai Tamil August 27, 2025 08:48 PM

சமூக ஊடகங்களில் கணவன்-மனைவியின் நகைச்சுவை மற்றும் சுவாரஸ்ய நிகழ்வுகள் விரைவில் வைரலாவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது, அப்படியொரு வீடியோ இணையத்தில் சூப்பராக பரவி வருகிறது. வீடியோவில், ஒரு மனைவி தனது கணவருடன் ஒரு சவாலான விளையாட்டில் ஈடுபடுகிறார். ஆனால் அதில் அவர் கடைசி கட்டத்தில் தந்திரமாக மூளையை பயன்படுத்தி விளையாட்டை வெற்றி பெற்ற விதம் அனைவரையும் சிரிக்கவைக்கும் அளவுக்கு நகைச்சுவையுடன் அமைந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aparana (@mr_mrs_op)

வீடியோவில், ஒரு கிளாஸ் மற்றும் பாட்டில் மூடியில் பானம் வைக்கப்படுகிறது. இருவரும் அதை குடிக்க வேண்டிய சவாலில் ஈடுபடுகிறார்கள். இதில் கணவனுக்கு பாட்டில் மூடியிலும், மனைவிக்கு கிளாஸிலும் பானம் இருக்கிறது. இதனால் கணவர் அதனை மிகவும் எளிதாக முடிக்க முடியும் என நினைத்தார். ஆனால் இந்த விளையாட்டில் பெண் பாட்டில் மூடியையும், ஆண் கிளாஸையும் தொட கூடாது என்ற நிபந்தனை இருந்தது. இந்நிலையில், மனைவி கடைசி மூடியை தனது கிளாஸுடன் மூடி, கணவரை விளையாட்டில் தோற்கடிக்கிறார்.

கணவர் வெறித்துப் பார்த்தபடியே இருப்பது போல காட்சி அமைந்ததால், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவைக் @mr\_mrs\_op என்ற இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது. இதனை தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளதுடன், பலரும் அதற்கான நகைச்சுவை கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.