தென்னிந்திய பிரபல நடிகை தமன்னா மற்றும் ஹிந்தி திரையுலக நடிகர் 'விஜய் வர்மா' இருவரும் நெடுங்காலமாக நடித்து தற்போது பிரிந்தவர்கள். இவர்கள் இருவரும் காதலித்த பாணியை பார்த்து இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் காதல் முறிந்தது.
இருப்பினும் தற்போது தமன்னா பல படங்களில் ஒதுக்க நேரமின்றி நடித்துக் கொண்டிருக்கும் சூழலில், நடிகை பாத்திமா சனா சேக் அவர்களுடன் விஜய் வர்மா சுற்றித் திரிவது பரவி வருகிறது.
மேலும் இருவரும் காதலிப்பதாக ஹிந்தி திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.இதனிடையே அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, ‘உங்கள் முன்னாள் காதலர் இன்னொரு நடிகையுடன் சுற்றித்திரிகிறாராமே..' என்று கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் அலட்டிக் கொள்ளாத தமன்னா, ‘யார் எப்படி போனாலும் எனக்கென்ன..?' என்று சிரித்தபடி தெரிவித்துவிட்டு சென்று விட்டார்.
இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.