மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்ப போட்டிகள் மாணவிகளின் தர்ணா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.
மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி ஆர் விளையாட்டு திடலில் 57 பிரிவுகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்ப போட்டிகள் இன்று நடைபெற்ற நிலையில் உசிலம்பட்டி, பேரையூர் ,மேலூர் கொட்டாம்பட்டி ,வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வீராங்கனைகள் வருகை தந்திருந்த நிலையில் போட்டி தொடங்கிய சில சுற்றுகளிலேயே போட்டியின் நடுவர் முறையான முடிவுகளை அறிவிக்காததால் நடுவரை மாற்ற வேண்டும் என முறையிட்டனர்.
பின்னர் மாவட்ட விளையாட்டுதுறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அடுத்த போட்டி நடத்துவதற்கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விளையாட்டு துறை அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே 'முதலமைச்சர் கோப்பை சிலம்ப போட்டி'-க்கு சிலம்பமே தெரியாதவரை நடுவராக நியமித்ததாக மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.