மீண்டும் மீண்டுமா...! வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகும் எடப்பாடி பழனிச்சாமி வீடு... ஆனால் இம்முறை...?
Seithipunal Tamil August 29, 2025 09:48 AM

சென்னை மாநகரத்தில் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி'அவர்களில் வீடு இருக்கிறது.நேற்று அங்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதனால் அங்கிருந்த தொண்டர்கள் பதறிபோனார்கள்.

இதுகுறித்து உடனடியாக  காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்தத் தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் நேப்பியர் பாலம் அருகே இருக்கும் கடலோர காவல் படை கிழக்கு மண்டல அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பற்றி தகவல் கிடைத்ததும் கோட்டை காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், மோப்ப நாய் உதவியுடன் கடலோர காவல் படை அலுவலக வளாகத்திலும் சோதனை செய்தனர். அதன் பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் பதற்றத்தை ஏற்படுத்தவே இந்த புரளி என்றும் தெரிய வந்தது.

இதுகுறித்து கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும், புது வண்ணாரப்பேட்டையில் இருக்கும் கடலோர காவல் படை அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.