பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ...!
Seithipunal Tamil August 29, 2025 11:48 AM

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி உள்பட, 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு ஏற்படுத்தியது.

இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதனையடுத்து இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் 09 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 04 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவு செய்தன. இதற்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது எங்கள் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. 

இதன்பின்னர், 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் கீழ் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 03 பேரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர் போன்ற விவரங்களை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) முதன்முறையாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத இயக்கத்தின் 03 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் என என்.ஐ.ஏ. இன்று உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த 03 பேரும் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர் என்றும், ஏனெனில், அது தனிமையான இடம். போலீஸ் பாதுகாப்பும் குறைவு மற்றும் சுற்றுலாவாசிகள் அதிகம் கூட கூடிய இடம் என பயங்கரவாதிகளுக்கு சாதகம் வாய்ந்த நிறைய விசயங்கள் இருந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்காக தொழிலாளர்கள் 02 பேருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும், தற்போது அந்த 02 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.