மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தானே கிசான் நகர் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, கோத்புந்தர் சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரை கண்டு உடனே தனது வாகனத்தை நிறுத்தி, நேரில் சென்று நிலையைப் பார்த்தார்.
அந்த இளைஞருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததால், உடனடியாக தனது காவல் குழுவுக்கு உத்தரவிட்டு, அருகிலுள்ள Horizon Prime மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார். மேலும், சிகிச்சை சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய, தனது அணியிலிருந்து ஒருவரை உடன் அனுப்பியதும் தகவல் வெளியாகியுள்ளது.
“>
இந்த மனிதநேயச் செயல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. “பொதுமக்கள் அவசர நிலைக்கு உள்ளாகும் போது பதவி, அதிகாரம் பாராமல் உதவுவது தான் உண்மையான தலைமைத்துவம்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.