நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடும் விஜய்…. தமிழக வெற்றி கழகத்தின் விநாயகர் சிலை வைரல்….!!
SeithiSolai Tamil August 29, 2025 10:48 AM

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பிரதிபலிக்கும் வகையில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த விநாயகர் சிலை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடுவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் சட்டை பையில் விஜய் புகைப்படம் இருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்து வழிபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் அந்த சிலைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் என்ற பெயர் பலகையை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.