திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு அமிர்தா(30) என்ற மகள் உள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார்(32) என்பவரை காதலித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
சமீபத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வோமாறு அமிர்தா கூறியதற்கு சஞ்சய் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய் குமார் குடும்பத்தைச் சேர்ந்த சில நபர்களும் அமிர்தாவின் குடும்பத்தினரும் கலந்து பேசி நேற்று எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் நேற்று நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணமகளின் வீட்டிற்கு சஞ்சய் குமாரும் அவரது குடும்பத்தினர்கள் சிலரும் வருவதாக கூறியிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை அவர்கள் வரவில்லை. திருமணநாள் வந்துவிட்ட நிலையில் மணமகன் யாரும் வராததால் அதிர்ச்சியடைந்த அமிர்தா சஞ்சய் குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பதற்றமடைந்த அமிர்தா தனது சகோதரர்கள் உதவியுடன் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சஞ்சய் குமரை அவரது உறவினர்கள் சிலர் அழைத்து சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் இருந்த சஞ்சய் குமாரை மீட்டு அமிர்தாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் நேற்று மதியம் திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமிர்தாவுக்கும் சஞ்சய் குமாருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.