தவெகவில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் திமுக அரசியல் செய்கிறது என்பது கேலிக்கூத்தானது, திமுக ஒருபோதும் இதுபோன்ற அர்ப்பதமான செயலை செய்யாது என்று பெரம்பலூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் தனியார் பல்கலைகழகத்தில் (தனலெட்சுமி சீனிவாசன்)நடைபெற்ற மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கோவி செழியன் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் முன்னிலையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,எட்டாவது ஆண்டியில் திமுக தலைவராக தொடரும் முதல்ருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அரசு மருத்துவகல்லூரி விட்டத்தை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு பொறியியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது என பெருமிதம் தெரிவித்த அவர்,அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக அரசின் புதிய திட்டங்களில் வேலை வாய்ப்பு பெறுவோர் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அரசு கவனமெடுக்கும்” என்றார்.
தொடர்ந்து தவெக மாநாட்டில் பவுன்சரால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சர்ச்சையில் திமுக உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இதுபோன்ற செயல் அரசியலில் கோமாளித்தனமானது தவெகவின் இயற்கைகுணம், இதுபோன்ற அர்ப்பத்தமான மலிவு அரசியலை ஒருபோதும் திமுக செய்யாது, இது கொள்கைக்கான இயக்கம், திமுக மீதான இந்த குற்றச்சாட்டு கேலிக்கூத்தானது வேடிக்கையானது” என்றார்.