தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
WEBDUNIA TAMIL August 29, 2025 04:48 AM

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, மழை காலத்திற்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.