இத எப்படி சாப்பிடறது…? பட்டாணியில் பெயிண்ட்… உஷார் மக்களே… வைரலாகும் வீடியோ…!!
SeithiSolai Tamil September 01, 2025 12:48 PM

பச்சை பட்டாணி பலருக்கும் பிடித்தமான உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் பச்சை பட்டாணி தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு காணொளி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியில், பட்டாணியின் மீது பச்சை நிற பெயிண்ட் ஊற்றப்படுவதைக் காட்டுகிறார்கள். இது பார்ப்பவர்களுக்கு உணவின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த காணொளி வைரலாகப் பரவி, “இத எப்படி சாப்பிடறது?” என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றிய இந்த வெளிப்பாடு, மக்கள் தாங்கள் உண்ணும் உணவு குறித்து மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

View this post on Instagram

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.