சமூக வலைதளத்தில் வெளியாகிய ஒரு காணொளி, போட்டியை விட நட்பு முக்கியம் என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளது. இந்தக் காணொளியில், நான்கு குழந்தைகள் மியூசிக் சேர் விளையாட்டில் பங்கேற்கின்றனர். விளையாட்டின் ஒரு கட்டத்தில், இரண்டு குழந்தைகள் ஏற்கனவே நாற்காலிகளில் அமர்ந்து விடுகின்றனர். ஒரு சிறுவன் நாற்காலியின் அருகே நிற்கிறான், ஆனால் அவனது நண்பனுக்கு இடம் இல்லை என்பதை உணர்கிறான்.
இதைப் பார்த்த அந்தச் சிறுவன், தனது நண்பனை நாற்காலியில் அமர வைத்துவிட்டு, தானாகவே போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறான். இந்தச் சிறுவனின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by 540fp (@540fp)